உறுப்பு தானம் செய்த இளைஞர் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

உறுப்பு தானம் செய்த இளைஞர் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்

ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சர் 

மூளை சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆறுதல் கூறினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தாஜ்நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் குமார் என்பவரின் மகன் கணபதி ஆகாஷ் கடந்த 19-ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் மூளைச் சாவு அடைந்தார். அவருடைய குடும்பத்தாரின் விருப்பப்படி அவருடைய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவருடைய உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு இரு தினங்களுக்கு முன்பு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் மின்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி கணபதி ஆகாசின் வீட்டிற்க்கு சென்று நேரில் சென்று, கணபதி ஆகாஷின் பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார். மேலும் கணபதி ஆகாசின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தீராத வேதனையிலும் பல பேர் உயிர் வாழ கணபதி ஆகாசின், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த குடும்பத்தாருக்கும், பெற்றோருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட குழு உறுப்பினருமான சேர்மன் எஸ்.செந்தில், ஆலாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் செல்லதுரை, காடச்சநல்லூர் முன்னாள் தலைவர் முனியப்பன், துணைத்தலைவர் திருமூர்த்தி ,தாஜ்நகர் கவுன்சிலர் எல்.கே.ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story