தொழிற்சங்க தலைவராக போட்டியின்றி தேர்வான முன்னாள் அமைச்சர்

தொழிற்சங்க தலைவராக போட்டியின்றி தேர்வான முன்னாள் அமைச்சர்
X

மரியாதை

தொழிற்சங்க தேர்தலில் தொழிற்சங்க தலைவராக போட்டியின்றி தேர்வான முன்னாள் அமைச்சர்.

சட்டமன்றத் தொகுதி விராலிமலையில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இதில் குறிப்பாக SRF, ரானே, ITC, TVS, SANMAR போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட தொழிற்சாலைகளுடன் வளர்ந்து வரும் தொழில் நகரமாக விராலிமலை இருந்தூ வருகிறது.

இந்த தனியார் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் தொழிற்சங்கம் பணிகள் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது இந்த நிலையில் விராலிமலையில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எப் தனியார் தொழிற்சாலையில் சுமார் 600க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், ஒவ்வொரு வருடமும் தொழில் சங்கத்திற்கான தேர்தல் நடைபெறவது வழக்கமாக இருந்து வருகிறது இந்த வருடத்திற்கான தேர்தல் ஆனது கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது தொழிற்சாலையில் வழக்கம் போல் இரண்டு அணி சார்பில் தேர்தலில் வேட்பாளர்கள் களம் காண்பார்கள்.

ஆனால் இந்த முறை தேர்தலில் ஒரு அணி சார்பீல் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் போட்டியிட உள்ளார் என்பதை அறிந்து எந்த ஒரு போட்டியும் இன்றி அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களால் ஏக மனதாக போட்டியின்றி முன்னாள் அமைச்சர் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இதற்கு முன்னதான தொழிற்சங்க தேர்தலில் பெரும் தொழிற்சங்கவாதிகளும்,

வழக்கறிஞர்களும் மட்டுமே தொழிற்சங்க தலைவராக பதவி வகித்து வந்த நிலையில் முதன்முதலாக மக்கள் பிரதிநிதியான முன்னாள் அமைச்சர், விராலிமலை சடட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரை போட்டியின்றி தேர்வு செய்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தி பார்க்க வைத்துள்ளது

இந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் தொழிற்சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பின்னர் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தரப்பில் கூறியதாவது:- "விராலிமலை எஸ் ஆர் எப் லிமிடெட் தொழிற்சாலை தொழிற்சங்க தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு முதலில் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம், எங்கள் பணியானது முழுக்க முழுக்க

தொழிலாளர் நலன் சார்ந்ததாக இருக்கும், தொழிலாளர் பணி நிரந்தரம் , தொழிலாளர் ஊதிய உயர்வு, தொழிலாளர் மருத்துவ காப்பீடு போன்ற தொழிலாளர் நலன் சார்ந்த விஷயங்களை முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

Tags

Next Story