திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை - முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்
ஆர்பி உதயகுமார் பேட்டி
மதுரை அட்சய பாத்திரத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா காந்தி மியூத்தில், அட்சய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்றது.இதில் மாற்று திறனாளிகளுக்கு அரிசி மற்றும் உணவுகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், ஆடிட்டர் சேது மாதவா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது இன்றைக்கு மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டு தொடக்க விழாவை திமுக அரசு காண்கிறது.
கடுமையான மின்கடன உயர்வு, சொத்து வரி உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி ஏற்றம் என இந்த மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.30 ஆயிரம் கோடியை ஊழல் செய்துவிட்டு அந்த பணத்தை ஸ்டாலின் மகன் உதயநிதியும், அவரது மருமகன் சபரீசன் எங்கே வைப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் ஆடியோ வெளியானது. இதன் மூலம் மக்கள் அதிர்ச்சி உறைந்து போனார்கள்.சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது சட்டமன்றத்தில் தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து எடப்பாடியார் கேள்வி எழுப்பிய போது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.
இந்த பேரிடர் காலங்களில் நீர்த்தேக்கங்களில் 17சகவீதம் தான் நீர் இருப்பு உள்ளது. குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்கள் அந்த திட்டத்தின் மூலம் கப்பலூர், நகரி போன்ற தொழில்பேட்டைகளில் சர்வே எண்கள் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் தொழில்பேட்டைகளும் நீக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,676 ஏக்கர் சர்வே எண்கள் நீக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே இருக்கும் தொழில்சாலைகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மாஸ்டர் பிளான் மூலம் சிறுகுறு நிறுவனங்கள் அமைவது பகல் கனவாக உள்ளது. அது மட்டுமல்ல இந்த மூன்று ஆண்டுகளில் அதிகமான கடன் சுமை உள்ள மாநிலமாக தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின் கட்டணத்தை உயர்த்த மட்டும் என்று கூறினார்கள் ஆனால் கடுமையாக மின் கட்டத்தை உயர்த்தி விட்டார்கள் .520 தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் அதில் எத்தனை சதவீதம் நிறைவேற்றி உள்ளோம் என்று மனசாட்சியுடன் கூற முடியுமா?நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறினார்கள் அது கிணத்தில் போட்ட கல்லாக இருக்கிறது, கல்வி கடன் ரத்து என்று கூறினார்கள் அது கிணற்று போட்ட கல்லாக இருக்கிறது, கேஸ் மானியம் 100 ரூபாய் தருவோம் என்று கூறினார்கள் அது கிணற்று போட்ட கல்லாக இருக்கிறது, பெட்ரோல் விலையை கண்துடைப்பாக மட்டும் குறைத்து விட்டு டீசலுக்காக விலையை குறைக்கவில்லை, ஆயிரம் ரூபாய் அனைத்து குடும்பங்களுக்கு வழங்கும் என்று கூறினார்கள் தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் உள்ளது.
ஆனால் ஒரு கோடிக்கு நபர்களுக்கு கொடுத்துவிட்டு பாரபட்சம் பார்க்கிறார்கள். நமக்கு நன்மை செய்வார்கள் என்ற எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தான் திமுக அரசு பரிசாக கொடுத்துள்ளது. இனியும் இந்த இரண்டு ஆண்டுகளில் அரசை மக்கள் நம்ப தயாராக இல்லை, மீண்டும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைவதற்க்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னைக்கு நான்காம் ஆண்டு தொடக்க விழா காணும் அரசிற்கு மக்கள் தரும் பரிசு மீண்டும் அம்மா ஆட்சியை மலரச் செய்வது தான் பரிசாக அமையும். அம்மா அரசின் திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம் ,அம்மா மினி கிளினிக் திட்டம் என அனைத்தையும் நிறுத்திவிட்டனர்.
இன்றைக்கு மக்கள் மனதில் மகிழ்ச்சி உள்ளதாக முதலமைச்சர் கூறுகிறார் மக்கள் மனதில் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சி தான் உள்ளது அதுதான் உண்மையான கள நிலவரம். இன்றைக்கு தமிழகத்தில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்படுகிறது அதை சமன் செய்ய அரசு முன்வரவில்லை. திமுக ஆட்சி எப்போதும் வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படும் அதைத்தான் இன்றைக்கு எடப்பாடியார் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். கொடைக்கானல், ஊட்டி போன்ற தலங்களுக்கு இ பாஸ் முறையை உயர்நீதிமன்றம் கடைபிடிக்க உத்தரவு இட்டு உள்ளது சிஸ்டம் கரெக்டாக உள்ளது ஆனால் அதை அரசு முறையாக கடை பிடிக்குமா என்று மக்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.
சிஸ்டத்தை அரசு முறையாக கையாள வேண்டும்.நில அபகரிப்புக்கு முகவரியே திமுக தான், கடந்த 2011 அம்மா ஆட்சி காலத்தில் நில அபகரிப்புக்கு தனி பிரிவை உண்டாக்கி அதன் மூலம் பல இடங்களை மீட்டு பாதிக்கப்படுவதற்கு மீட்டு கொடுத்தார். தற்போது நில அபகரிப்பு தொடர்கிறது இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வரும்பொழுது அம்மா வழியில் மீண்டும் தனி கவனம் செலுத்தி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .கிணற்றைக் காணோம் வடிவேலு காமெடி போல தற்போது நிலத்தை காணோம் என்று மக்கள் கண்ணீர் விட்டு வருகிறார்கள்.
மக்கள் கண்ணீர் சும்மா விடாது மக்கள் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். காங்கிரஸ் தலைவர் கொலையில் கொலையா? தற்கொலையா ? என்ற முடிவு கூட இன்னும் வரவில்லை இது காவல்துறை மெத்தனமா? அரசியல் குறிக்கீடா? அழுத்தமா ?என்று தெளிவாக தரவில்லை.புகார் கடிதம் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் ஆனால் காவல்துறையில் கடிதம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள் .காவல்துறையை சுதந்திரமாக விட்டால் ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள் அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ஆனால் இன்றைக்கு காவல்துறை செயல் இழந்து உள்ளது. 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் 300 ஆண்டுக்கான சுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளனர் தமிழகத்தில் மகிழ்ச்சி இல்லை வீழ்ச்சியில் தான் உள்ளது என கூறினார்.