முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

அஇஅதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரித்தார்.

காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவியூர், அரசகுளம், குரண்டி, முஸ்டக்குறிச்சி, மேலக்கள்ளங்குளம், வேப்பங்குளம், தொட்டியங்குளம், என்.நெடுங்குளம், முடுக்கன்குளம், தேனூர், சாலை மறைக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யக்கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் செல்லும் இடங்களில் எல்லாம் கொளுத்தும் வெயிலிலும், அஇஅதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாளுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்த பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகை‌யி‌ல், நான் கடந்த முறையும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்தேன். அதேபோன்று தற்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வந்துள்ளேன். என் உயிர் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு மட்டுமே வாக்குகள் கேட்டு வருவோம். ஆனால் அங்கே ஒருவர் அஇஅதிமுக வில் இருந்து எல்லா பதவியையும் அனுபவித்து விட்டு தற்போது அதையெல்லாம் மறந்துவிட்டு பலாப்பழம் என்று சுற்றி திரிகிறார்.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மாவின் வெற்றி சின்னம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ஜெயபெருமாள் அவர்களை அமோக வெறச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டார். மேலும் இந்த பிரச்சாரத்தின் போது, காரியாபட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்கள் தோப்பூர் முருகன் மற்றும் ராமமூர்த்திராஜ் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.சிவசாமி, மணிமேகலை, திருச்சுழி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், முனியாண்டி, நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், பூமிநாதன், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் வேங்கை மார்பன், வேப்பங்குளம் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஆதீஸ்வரன், வழக்கறிஞர்கள் ஆவியூர் ரமேஷ், பூமிநாதன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Next Story