பூக்கடையில் பூ கட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி !

பூக்கடையில் பூ கட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி !

வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் வளர்மதி பூக்கடை வியாபாரிகளிடம் பூக் கட்டிக் கொண்டே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ராஜசேகர் அவர்களுக்கு மதுராந்தகம் பஜார் வீதியில் உள்ள கடைகளில் வியாபாரிகளை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பூக்கடைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் வளர்மதி பூக்கடை வியாபாரிகளிடம் பூக் கட்டிக் கொண்டே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியை மதுராந்தகம் நகரத்தார் செயலாளர் பூக்கடை சரவணன் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story