அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த முன்னாள் அமைச்சர்

அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சித்த முன்னாள் அமைச்சர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது கடல்லயே கிடைக்காத மீன் என்கின்றார் நீதிபதி - முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது கடல்லயே கிடைக்காத மீன் என்கின்றார் நீதிபதி என முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது பேசிய அவர் இன்னும் 85 நாட்கள் முதல் 90 நாட்களுக்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எல்லா மதத்திலும் உள்ள ஒரே கட்சி அதிமுக.

பாரதத்தையே ஆளுகின்ற பிஜேபியை போயா என்று கூறி தனியாய் நின்று காட்டுகிறேன் என சக்தி படைத்த இயக்கம் அதிமுக. எடுத்த முடிவில் ஒரே நிலையாக நின்று மத நல்லிணக்கம் எங்கள் உயிரினும் மேலானது என்ற கொள்கையோடு உள்ள அதிமுகவில் தற்போது சிறுபான்மையினர் சாரை சாரையாக சேர்ந்து வருகின்றனர்.

மதுபான கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கி கரூர் என்ற ஊருக்கே கெட்ட பெயர் வாங்கி கொடுத்து விட்டார் செந்தில் பாலாஜி. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் என்பது கடல்லயே கிடைக்காத மீன் என்கின்றார் நீதிபதி.

மணல் கடத்தல் செய்து உள்ளே இருக்க வேண்டிய பொன்முடி அவர்களின் தேர்தல் வியூகத்தை வகுக்குறார். இதற்கெல்லாம் தலைவர் தங்கம் தென்னரசு தான் அவர் கூட இருப்பவர் பொன்முடி எல்லாம் ஒன்றாக சேர்ந்து உள்ளே போக முடிவெடுத்திருக்கிறார்கள் போல.

பொன் கொழிக்கும் இந்த திருச்சுழி மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும் அதேபோல விருதுநகர் மாவட்டமும் மீட்டெடுக்கப்பட வேண்டும் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.

Tags

Next Story