விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ஆறுதல்

விபத்தில் சிக்கியவர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ ஆறுதல்
X

ஆறுதல் தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ 

திருவண்ணாமலை கலசப்பாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 25 பேர் கடந்த வாரம் சபரிமலைக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் மினி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 21 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்து கோட்டயம் அரசுமருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பினர். அவர்களை முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளருமான வி.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது, மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொய்யாமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story