அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்பி பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்பி பிரசாரம்

தேர்தல் பிரசாரம் 

சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடியில் பெரம்பலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து முன்னாள் எம்பி குமார் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அதிமுக தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார் அப்போது அவரை ஆதரித்து பேசிய திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப. குமார் பேசியதாவது எதிரணியின் வேட்பாளரின் தந்தையால் முன்னால் அமைச்சர் செல்வராஜ் எவ்வளவு பாதிக்கப்பட்டார் என்பது உங்களுக்கே தெரியும்.முன்னால் அமைச்சர் செல்வராஜ் தூய்மையான அரசியல் வட்டத்தில் இருந்தார். அவருடைய அண்ணன் மகன் தான் நமது வேட்பாளர் சந்திரமோகன். இறுதி காலத்தில் அமைச்சர் கே.என்.நேருவால் பலபேர் பாதிக்கப்பட்டனர்.

அதில் முன்னாள் அமைச்சர் செல்வராஜூம் ஒன்று. ஆகவே அதை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் மேலும் அதிமுக ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்கள் மக்களுக்கு வழங்கினோம். அதையெல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது. தாலிக்கு தங்கம் திட்டம், விலையில மிக்ஸி,பேன் வழங்கும் திட்டம், ஆடு,மாடு, கோழி வழங்கும் திட்டத்தை எல்லாம் மூடுவிழா பண்ணிவிட்டார்கள்.

அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என கூறிய ஸ்டாலின் உயர்த்தவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகின்றேன் என கூறிய ஸ்டாலின் பாதி பேருக்குத் தான் கொடுத்தார். அதையும் எத்தனை பேர் பெற்றார்கள் என தெரியவில்லை. இப்படிபட்ட ஒரு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து எச்சரிக்கை மணி அடிப்பதற்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நமது வேட்பாளர் சந்திரமோகனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்குமாறு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story