சரக்கு ரயில் மோதியதில் முன்னாள் காவலா் பலி
திண்டுக்கல்லில் சரக்கு ரயில் மோதியதில் முன்னாள் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லில் சரக்கு ரயில் மோதியதில் முன்னாள் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்லில் சரக்கு ரயில் மோதியதில் முன்னாள் காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் என்ஜிஓ குடியிருப்பைச் சோ்ந்தவா் பி.மாணிக்கம் (59). காவல் துறையில் பணியாற்றிய இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றாா். இவருக்கு பிரேம், மணி என்ற மகன்களும், நதியா என்ற மகளும் உள்ளனா். மகன்கள் வெளிநாடு, வெளியூரில் வசித்து வரும் நிலையில், திண்டுக்கல்லிலுள்ள மகள் வீட்டில் மாணிக்கம் வசித்து வந்தாா். இந்த நிலையில் திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட மாணிக்கம், திண்டுக்கல்லில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.
Next Story