முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் டிஜிபி
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் 20,500ரூபாய் அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்ததால் இன்றே கடைசி வாய்ப்பு என கூறி நீதிபதி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அப்போது பலமுறை கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து உங்களின் வழக்கறிஞர்கள் ஏன் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிடம் நீதிபதி பூர்ணிமா கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து என் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் நானே வாதாடுகிறேன் என முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட நீதிபதி ராஜேஷ் தாசை வாதாட அனுமதித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒரு மணி தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார்.
அப்போது ராஜேஷ் தாஸ் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் தன் மீது வேண்டுமென்றே இவ்வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கில் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யபட்டுள்ளதே உண்மைக்கு புரம்பானது என்றும் இவ்வழக்கிற்கு முக்கியமானது பரனூர் சுங்கச்சாவடி சிசிடிவி காட்சிகள் இதில் இல்லை என்றும் 30 வருடங்களுக்கு மேலாக காவல் துறையில் எந்த புகார்களுக்கும் ஆளாக பணியாற்றிய நிலையில் வேண்டுமென்றே பொய் புகார் அளிக்கபட்டுள்ளதாக அடுகடுக்கான வாதங்களை ராஹேஷ் தாஸ் நீதிபதி முன்னிலையில் முன் வைத்தார். அவரது வாதங்களை கேட்ட நீதிபதி இவ்வழக்கில் நாளை முதல் 7 நாட்களுக்கு ராஜேஷ் தாசே உடல் நலனை கருத்தில் கொண்டு நண்பகல் வேலையில் அவரே வாதாட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.