ஜிகே வாசன் பிறந்த நாள் விழா

ஜிகே வாசன் பிறந்த நாள் விழா

சம பந்தி விருந்து

ஓமலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜிகே வாசன் பிறந்தநாளையொட்டி தமாகா நிர்வாகிகள் பொதுமக்களுக்கு சமபந்தி விருந்து வழங்கினர்
சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட தமாகா சார்பில் ஜிகே வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீன்திரகுமார் தலைமையில் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து ஓமலூர் பேருந்து நிலையத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாமானிய மக்களுக்கு நாள் முழுவதும் சமபந்தி விருந்து நடைபெற்றது. முன்னதாக மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் சாப்பாடு வழங்கி சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஓமலூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் குலோத்துங்கன், சேதுராமன், ஓம்சக்தி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணியின் மாநில பொதுச் செயலாளர் ரகுநந்தகுமார், தொழிற்சங்க நிர்வாகி சின்னையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story