வானூர் முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் மறைவு - முதலமைச்சர் இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
வானூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமசிவம் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வானூர் சட்டமன்றத் தொகுதி கழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையுற்றேன். பரமசிவம் அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந்து கழகப் பணியையும் மக்கள் பணியையும் திறம்பட ஆற்றிய செயல்வீரர் ஆவார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Next Story