நியாய விலை கடைக்கு அடிக்கல் நாட்டல்

நியாய விலை கடைக்கு அடிக்கல் நாட்டல்

அடிக்கல் நாட்டல் 

புதுக்கோட்டை மாவட்டம் ,செட்டியாப்பட்டியில் புதிய ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட. வடவாளம் ஊராட்சி வடக்கு செட்டியாப்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் 10 /03 /2024. ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நியாய விலை கடை ( ரேஷன் கடை ) கட்டுவதற்கான பணியை அடிக்கல் நாட்டி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை முத்துராஜா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் அ கலியமுத்து கழக நிர்வாகிகள் க செ மணிமாறன், த சிவகுமார், ஏ எஸ் கருணாநிதி, வி ராஜகோபால் , மு செந்தில் ,அன்பு ,லாசர், மை பால்ராஜ், ஆர் குமார், ராமசாமி, க மாரிமுத்து உடையார், மலையரசன், பழனிச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story