புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
அடிக்கல் நாட்டு விழா
ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு ஊராட்சியில் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வடகாடு ஊராட்சியில் சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிக்காடு, புலிகுத்திக்காடு ஆகிய கிராமங்களுக்கு புதிய தாா்ச் சாலை, சிறுவாட்டுக்காடு பழங்குடியின மக்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் உள்படரூ.1.18 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாட்டுப்பட்டிகாட்டில் நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.வேலுச்சாமி, மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் மு.முருகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
Next Story