சேவூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேவூர் ரயில் நிலையம் அருகில் , சுமார் 55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ரயில்வே மேம்பாலத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
இதனை பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து சேவூர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ராஜேந்திரன் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த ரயில்வே மேம்பாலத்தின் மூலம் , சேவூரை சுற்றியுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள் மேலும் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் பதினைந்தாவது பட்டாலியன் காவல் படை பிரிவினர், ஆசியோர் பயன்பெறும் வகையில், சிரமமின்றி சென்று வர பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.