மதுக்கூர் அருகே பாலம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா
மதுக்கூர் அருகே பாலம் கட்டும் பணிக்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர- பெருகவாழ்ந்தான் சாலையில் சொக்கனாவூர் ஊராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணனாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும்பணி் ரூ 14.50 கோடி மதிப்பீட்டில் மதுக்கூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ தலைமையில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரான கா அண்ணாதுரை அடிக்கல் நாட்டினார். மதுக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் லண்டன் கோவிந்தராசு, கோட்டூர் ஒன்றிய செயலாளர் தேவதாஸ், தலைமை செயற்குழு பழஞ்சூர் செல்வம், பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் பார்த்திபன், பொதுக் குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் ராம குணசேகரன், திருவாரூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி, மாவட்ட கவுன்சிலர் செந்தாமரை ஞானசேகரன், நகர செயலாளர் ராசகோபால், ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் மெய்யநாதன், மதுக்கூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வீரமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் என மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் உறுப்பினர் மற்றும் சொக்கனாவூர் புளியகுடி பெரியக்கோட்டை கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story