இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழா

இந்து சமய ஆணையர் அலுவலகம்

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ எழிலரசன் பங்கேற்றார்.

காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் தற்போது காஞ்சிபுரத்தில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.காஞ்சிபுரம் மண்டலத்தில் உள்ள 1439 திருக்கோயில்களின் திருப்பணி மதிப்பீடுகள் மற்றும் அதற்கு உண்டான கோப்புகள் திருக்கோயில்களின் வரவு செலவுகள் குறித்த குறிப்புகள் என அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் புதிய அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது.

அவ்வகையில் பெரிய காஞ்சிபுரம் அருள்மிகு ஓணான்காந்தேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இணை ஆணையர் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டு இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வழியாக பணிகளை துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அவ்வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், இணை ஆணையர் வான்மதி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன் கலந்து கொண்டு பூமி பூஜைகளை நிகழ்வில் பங்கேற்றனர். வேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த நிலையில், சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யபட்டு தற்போது பணி துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், ஓணாகாந்தேஸ்வரர் அறங்காவலர் குழு தலைவர் வேல்முருகன், செயல்அலுவலர் தியாகராஜன், முத்துலட்சுமி, ஆய்வர்கள், திமுக நிர்வாகிகள் திலகர், வெங்கடேசன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story