உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் அடிக்கல் நாட்டல்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் அடிக்கல் நாட்டல்
X
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ. 13.19 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், 2023 - 24ம் ஆண்டுக்கான இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் வாழவந்தான் கண்மாயில் உள்ள திறந்த வெளி கிணறுகள், சிலமனேரி கண்மாய் அருகே உள்ள தலைமை நீரேற்று நிலையத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் படி சேத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள மின் மாற்றியில் இருந்து தலைமை நீரேற்று நிலையம் வரை 192 மின் கம்பங்கள் மற்றும் 13 மின் மாற்றிகள் மூலம் இத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து, செட்டியார்பட்டி பேரூராட்சியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மூலதன மானிய நிதித்திட்டத்தின் கீழ் ரூ.8.77 கோடி மதிப்பீட்டில் சாஸ்தா கோயில் தலைமை நீரேற்று நிலையத்தில் இரண்டு கிணறுகள் அமைத்து, சுமார் 12 கிமீ தூரத்திற்கு குழாய் பதித்து, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கும், இயக்கம் மற்றும் பராமரிப்பு நிதித் திட்டத்தின் கீழ் ரூ. 1.42 கோடி மதிப்பீட்டில் சாஸ்தா கோயில் தலைமை நீரேற்று நிலையத்திற்கு மும்முனை மின் இணைப்பிற்கான தனி வழித்தடம் அமைப்பதற்கும் ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

Tags

Next Story