சாம்பவா்வடகரையில் நியாயவிலைக் கட்டடத்துக்கு அடிக்கல்

சாம்பவா்வடகரையில் நியாயவிலைக் கட்டடத்துக்கு அடிக்கல்

அடிக்கல் நாட்டப்பட்டது 

அதிமுக சார்பில் நியாயவிலைக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி மாவட்டம் சாம்பவா்வடகரை பேரூராட்சி 9ஆவது வாா்டில் நியாயவிலைக் கடை புதிய கட்டடத்துக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் கே. ராஜேஸ்வரி தலைமை வகித்தாா்.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் வி.பி. மூா்த்தி முன்னிலை வகித்தாா். கடையநல்லூா் எம்எல்ஏ செ. கிருஷ்ணமுரளி பங்கேற்று அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடக்கிவைத்தாா். தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், அச்சன்புதூா் பேரூராட்சித் தலைவா் டாக்டா் சுசீகரன், கடையநல்லூா் வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் முத்துப்பாண்டி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

Tags

Next Story