விருதுநகரில் புதிய அருங்காட்சியக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்

விருதுநகரில்  புதிய அருங்காட்சியக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்
அடிக்கல் நாட்டிய அமைச்சர் 
தமிழரின் தொன்மையை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதே அரசின் இலக்கு என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் ரூ.6.8 கோடி மதிப்பீட்டில் அரசு அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், உலகப்புகழ் பெற்ற கீழடி அருங்காட்சியகம் மற்றும் அழகாக உருப்பெற்று வரும் பொருணை அருங்காட்சியகம் போல விருதுநகரில் அமையவிருக்கும் அருங்காட்சியகமும் அழகுற அமையவிருக்கிறது என்றும் பழந்தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் எப்படி இருந்தது இங்கு வாழ்ந்த மக்களின் நாகரிகம் பண்பாடு உள்ளிட்ட அனைத்தும் ஒரே இடத்தில் அமையவிருப்பதாக தெரிவித்தார்.

முன்கற்காலத்தில் வைப்பாற்றில் எப்படிப்பட்ட நாகரிகம் இருந்தது என்பதை விஜய கரிசல்குளம் அகழாய்வு மூலம் அறிந்து வருவதையும் இதை அனைவருக்கும் விளக்கும் விதமாகவும் இந்த புதிய அருங்காட்சியகம் அமையவிருக்கிறது என்றும் திருநெல்வேலியில் பொருணை அருங்காட்சியகத்தை முதல்வர் திறக்க வரும் நேரம் விருதுநகர் அருங்காட்சியகமும் திறந்து வைக்க பணிகளை துரிதப்படுத்தப்படும் என்றார்.

மேலும் தமிழரின் தொன்மையை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பதே மாநில அரசின் இலக்குக்காக இருக்கிறது என்றார்.

Tags

Next Story