ஊட்டுவாழ் மடத்தில் ரயில்வே சுரங்கப்பாதை பணிக்கு அடிக்கல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே ஊட்டுவாழ் மடத்தில் ரூபாய் 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரயில்வே சுரங்கப்பாதை பணி, மார்த்தாண்டம் விரிகோட்டில் ரயில்வே மேம்பால அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் நடத்தினர்.
ரயில்வே பணிகள் தொடக்கம் மற்றும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நாகர் கோவில் ரயில் நிலையத்தில் காணொளி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம் ஆர் காந்தி எம்எல்ஏ ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் முத்துவேல், பாரதிய ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், மாநில நிர்வாகிகள் உமாரதி ராஜன், மீனாதேவ், கவுன்சிலர் ஐயப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊட்டுவாள் மடம் சுரங்கப்பாதை பணி நடந்து வருகின்ற இடத்தில் பாரதிய ஜனவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.