செங்கல்பட்டில் விளையாட்டு வளாகம் அமைக்க அடிக்கல் நாட்டல்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு வளாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மேலும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன்,
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம்,தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்,
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்,மாவட்டகுழுத் தலைவர்செம்பருத்தி துர்கேஷ், காட்டாங்குளத்தூர் ஊராட்சி மன்ற குழு தலைவர் உதயா கருணாகரன், உள்ளாட்சி மன்ற தலைவர்கள்,நகர மன்ற தலைவர்கள்,நகரச் செயலாளர் ,ஒன்றிய கவுன்சிலர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.