காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா
காமராஜர் கல்லூரியில் முப்பெரும் விழா
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நிறுவனர் தினவிழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் அசோக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விழாவை முன்னிட்டு கல்லூரியில் துறைகளுக்கு இடையேயான ஆடவர்களுக்கான கிரிக்கெட் மகளிர்க்கான கோ-கோ மற்றும் இருபாலருக்குமான சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் துணை மேலாளர் (ஓய்வு) கிருஷ்ணகுமார் வழங்கினார். விளையாட்டு விழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் முன்னாள் மாணவரான கோவை பாரதியார் பல்கலைக்கழக உடற்பயிற்சித்துறை பேராசிரியர் குமரேசன் பரிசுகளை வழங்கினார்.
மேலும் 2022-2023 ஆண்டுக்கான பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரிக்கான விருது பெற்ற விலங்கியல் துறை உதவிப் பேராசிரியர் ஜெ. நாகராஜன் மற்றும் பல்கலைக்கழக அளவில் சிறந்த அணியாக தேர்வு பெற்ற அணியின் ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமிக்கும் சிறப்பு நினைவு பரிசுகள் வழங்கப்பெற்றன. கல்லூரி முதல்வர் ஜெ. பூங்கொடி ஆண்டு அறிக்கையினையும் கல்லூரி கணிப்பொறித் தலைவர் ஜோசப்ராஜ் விளையாட்டு விழா அறிக்கையினையும் வாசித்தனர். விழாவிற்கு கல்லூரி செயலாளர் சோமு தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் அசோக் வரவேற்புரையும் வேதியியல் துறை தலைவர் சுகிர்தாதேவியின் நன்றியுரையும் வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் சிறப்பான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.