வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி

தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டிதான் வர போகிறது என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; தமிழக அரசு குறிப்பாக இந்து பண்டிகைகளுக்கு இலக்கு வைத்து மது விற்பனை செய்கின்றார்கள், இதனால் தமிழகத்தில் இளைஞர் சமுதாயம் கெட்டழிந்து வருகிறது. விவேகானந்தர் பிறந்தநாளான்று தமிழக அரசாங்கம் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
அதே போல் சமீப காலமாக எங்கு பார்த்தாலும், கருணாநிதி நூற்றாண்டு விழா என்கிற போர்வையில் தங்களுடைய குடும்ப தலைவருக்கு, கட்சித்தலைவருக்கு, அரசு பணத்தில் விழாவை கொண்டாடி வருகிறது. தமிழ்நாட்டை மோடி, அண்ணாமலை தான் காப்பாற்ற வேண்டும், அதற்காக நேற்று முதல் இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் "சேவ் தமிழ்நாடு", "டிஸ்மிஸ் டிஎம்கே", என்கிற இயக்கத்தை ஜனநாயக அடைப்படையில் துவங்கி நடத்தி வருகிறோம்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு இருக்கும் எனவும், நாடுமுழுக்க காங்கிரஸ் இல்லாத பாரதம் , கழகங்கள் இல்லா தமிழ்நாடு உருவாக வேண்டும். தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என நான்கு முனை போட்டிதான் வர போகிறது, நாம் தமிழர் மற்றும் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். வருகின்றன நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெரும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நடைப்பெற்று வருகிறது என தெரிவித்தார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
