நான்கு வழி சாலை திட்டம் - அமைச்சர் துவக்கி வைப்பு

நான்கு வழி சாலை திட்டம் - அமைச்சர் துவக்கி வைப்பு

பணிகள் துவக்கம் 

காங்கேயத்தில் சாலை மேம்பாட்டு திட்ட பணியினை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பரஞ்சேர்வழி ஊராட்சி நால்ரோட்டில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஈரோடு-காங்கேயம் சாலையில் திட்டுப்பாறை முதல் ஆலாம்பாடி வரை நான்கு வழி சாலையாக மேம்பாடு செய்யும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குனர்மலர்வழி,நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story