பைக் சாகசம் செய்த நான்கு பேர் கைது
நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பொதுமக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்க உங்கள் எஸ்.பி யுடன் பேசுங்கள்: 8428103090 என்ற தொலைபேசி எண் மூலம் கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சனைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக் சாகசத்தில் இளைஞர்கள் சிலர் ஈடுபடுவதாக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளித்தனர்,
அந்தப் புகாரை ஏற்று உடனடியாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட வேதாரணியம் காவல்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள், அதன் பேரில் கோடியக்கரையை சேர்ந்த முஹமது கைப். ,முஹமது ஹல்பான், . அப்துல்கலாம் வாசிம் அகமது ஆகிய நான்கு பேரும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி பைக் ரேஸில் ஈடுபட்டது வேதாரண்யம் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது.மேலும் விசாரணைக்காக அவர்களை வாகனத்தோடு வேதாரண்யம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகனத்தை அதி வேகமாக இயக்குதல் போன்ற பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்ட நால்வரும் இனிமேல் இதுபோன்ற தவறில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்து மன்னிப்பு கேட்டதன் பேரில் அவர்களை எச்சரித்து காவல்துறையினர் விடுவித்தனர்.