திருக்கழுக்குன்றம் அருகே நான்கு பேர் கைது

திருக்கழுக்குன்றம் அருகே நான்கு பேர் கைது
தண்டனை 
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருக்கழுக்குன்றம், கொத்திமங்கலம் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, அப்பகுதி வாலிபர்கள் நன்கொடை வசூலித்தனர். அங்கு காயலான் கடை நடத்தும், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த ஷெரீப் மகன் அகமதுபாஷாவிடம், 35, நன்கொடை கேட்டு, அவர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கடந்த 12ம் தேதி இரவு, கொத்திமங்கலத்தைச் சேர்ந்த 10 வாலிபர்கள், அகமதுபாஷா, அவரது சகோதரர் பாரூக், 37, ஊழியர் இம்ரான் என்கிற இப்ராகிம், 33, ஆகியோரை கத்தியால் குத்தி தாக்கினர்.

அவர்கள், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து, கொத்திமங்கலத்தைச் சேர்ந்த நான்கு பேரை ஏற்கனவே கைது செய்தனர்.

அதே ஊரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, 21, சந்துரு, 24, உதயகுமார், 27, அருள், 20, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். மேலும் இரண்டு பேரை தேடுகின்றனர்..

Tags

Read MoreRead Less
Next Story