குப்பாயி அம்மன் திருக்கோவில் நான்காம் ஆண்டு உற்சவ விழா

தெற்கு வாசல் ஜெயவிலாஸ் அருகே முகுப்பாயி அம்மன் திருக்கோவில் நான்காம் ஆண்டு உற்சவ விழா நடைபெற்றது.

மதுரை தெற்குவாசல் பகுதியில் ஜெயவிலாஸ் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ குப்பாயி அம்மன் திருக்கோவில் 4ம் ஆண்டு 3 நாட்கள் உற்சவ விழா விமர்சியாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் நிகழ்ச்சியில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன.

இத்திருவிளக்கு பூஜையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி தரிசனம் செய்தனர். 2ம் நாள் நிகழ்வில் பால்குடம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்து அழகு குத்தி பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பூசாரிகள் குண்டுமுத்துபாண்டி மணிகண்டன், கோவில் கமிட்டியாளர்கள், மதுரை மறவர் உறவின்முறை சங்கம் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்

Tags

Read MoreRead Less
Next Story