கடன் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி

கடன் தருவதாக கூறி பெண்ணிடம் நூதன மோசடி

பைல் படம் 

தஞ்சாவூரில் பெண்ணிடம் கைப்பேசியில் பேசி கடன் தருவதாகக் கூறி, ஓடிபி விவரங்களைப் பெற்று ரூ.10 ஆயிரத்தைத் திருடிய மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்த 33 வயது பெண்ணுக்கு மர்ம நபர் கைப்பேசியில் பேசி குறைந்த வட்டியில் ரூ. 4 லட்சத்துக்கு தனி நபர் கடன் வழங்கப்படும் எனக் கூறினார். இதை நம்பிய அப்பெண் மர்ம நபர் கேட்ட வங்கிக் கணக்கு விவரம், ஓ.டி.பி. விவரத்தைக் கொடுத்தார். இதன் மூலம் பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து மர்ம நபர் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை இணையவழியில் திருடிவிட்டார். இதன் பின்னர் அப்பெண் தொடர்பு கொண்டும் மர்ம நபர் இணைப்பை எடுக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் தஞ்சாவூர் சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story