கூகுள் பேயில் பணம் அனுப்புவதாக கடைக்காரரிடம் மோசடி

கூகுள் பேயில் பணம் அனுப்புவதாக கடைக்காரரிடம் மோசடி

சம்பவம் நடந்த கடை 

திருப்பத்தூரில் கூகுள் பேயில் பணம் அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றி சென்ற மர்ம நபர்கள் மீது பாதிக்கப்பட்ட கடைக்காரர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்சல் கிராம பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் சேகர் இவர் திருப்பத்தூர் காந்தி ரோடு பகுதியில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முன்பு சேகர் கிப்ட் கார்னர் என்ற பெயரில் பேன்சி ஸ்டோர்ஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைக்கு திடீரென வந்த இரண்டு மர்ம நபர்கள் கடையில் சாக்லேட் 165 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர் பின்னர் 600 ரூபாய் google pay-வில் போடுகிறேன் கையில் தாருங்கள் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய சேகர் சரி அனுப்புங்கள் என்று கூறியுள்ளார் ஆனால் மர்ம நபர் google pay-வில் பணத்தை அனுப்பாமல் மெசேஜில் குறுந்தகவல் 765 ரூபாய் ரிசிவ்டு என நம்பும்படி அனுப்பி உள்ளனர். இதனைப் பார்த்த சேகர் உடனடியாக தனது கையில் இருந்த 765 ரூபாயை அந்த இரண்டு மர்ம நபர்களிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். பின்னர் அக்கவுண்டை பரிசோதனை செய்த சேகருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சேகர் மர்ம நபரின் தொலைபேசி எண் மற்றும் குறுந்தகவல் நகலை இணைத்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story