போலி நகையை அடகு வைத்து மோசடி

போலி நகையை அடகு வைத்து மோசடி

திருவெம்பாலா பிரசாந்த்

ராமநாதபுரம் தனியார் வங்கியில் தங்க முலாம் பூசிய செம்பு நகைகளை அடகு வைத்து ரூ. 8 .80 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் ராமநாதபுரம் லோக்கல் பண்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் திருவெம்பாலா பிரசாந்த்(வயது35) என்பவர் பல்வேறு தவணைகளில் மொத்தம் 181 கிராம் நகைகளை வைத்து ரூ. 8 லட்சத்து 80 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி வங்கியில் தணிக்கை மேற்கண்ட போது மேற்கண்ட திருவம்பாலா பிரசாந்த் என்பவர் வைத்த 181 கிராம் நகைகளும் தங்கம் மூலாம் பூசப்பட்ட செம்பு நகைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து வங்கி மேலாளர் ராமநாதபுரம் ராமு என்பவரின் மகன் பாண்டியராஜ் (33) என்பவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீசிடம் புகார் செய்தார்.

அவரின் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து திருவம்பாலாபிரசாந்த் என்பவரை கைது செய்தனர். வங்கியில் தங்கம் மூலாம் பூசிய செம்பு நகைகளை வைத்து ரூ. 8 இலட்சத்து 80 பணம் பெற்று மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story