கடன் தருவதாக முன்பணம் வாங்கி மோசடி: 4பேர் கைது

கடன் தருவதாக முன்பணம் வாங்கி மோசடி:  4பேர் கைது

கோப்பு படம் 

கடன் தருவதாக முன்பணம் வாங்கி மோசடி செய்த நீதி நிறுவன உரிமையாளர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பொன்னமராவதி மற்றும் அறந்தாங்கி நகரில் சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. தனிநபர் கடன் வழங்க ரூபாய் ஒரு லட்சத்துக்கு பதிவு கட்டணமாக ரூபாய் ஆயிரமும் முதல் மாதத் தவணைத் தொகை ரூபாய் 6000 செலுத்தி கடன் தொகை பெற்றுக் கொள்ளலாம். மீத தவணைத் தொகையை மாத மாதம் செலுத்தலாம் என்று அறிவித்தனர்.

இதை நம்பி ஏராளமானோர் பதிவு கட்டணம் மற்றும் முதல் மாத தவணை தொகையை செலுத்தினர். ஆனால் கூறியபடி கடன் தொகை வழங்கப்படவில்லை. பணம் கொடுத்தவர்கள் திரும்பி கேட்கவே மோசடி தொடர்பாக அதே நிறுவனத்தில் பணியாற்றும் பொன்னமராவதி கிளை மேலாளர் சிங்கம்புணரியை சேர்ந்த நாகராஜன் என்பவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் மொத்தம் 290 பேரிடமிருந்து ரூபாய் 29 லட்சத்து 96 ஆயிரத்து 500 வரை வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நிதி நிறுவன உரிமையாளர் தூத்துக்குடியைச் சேர்ந்த நிர்மல் குமார் வயது 40 அவருடன் இணைந்து செயல்பட்ட திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்த கோபி வயது 40, திருச்சி நவல்பட்டை சேர்ந்த தேவிகா வயது 42, திருச்சி பீமநகரை சேர்ந்த கென்னடி வயது 34 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story