பத்திரப்பதிவில் மோசடி: கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

பத்திரப்பதிவில் மோசடி: கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

பத்திரப்பதிவில் மோசடி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள் உரிய நீதி கிடைக்க கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கூனவேலம்பட்டிபுதூர் தோனமேடு 1வது வார்டு பகுதியில் செங்குந்தர் சமூக மக்களுக்கு பாத்தியப்பட்ட நிலத்தை பாவடியாக பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்தனர்.

அதன் சர்வே எண் 138/5.A, 138/5.B ஆகும். இதன் பரப்பளவு 0.18 சென்ட் ஆகும். இந்த இடத்தை தனிநபருக்கு சாதகமாக்க வருவாய் துறை அதிகாரிகள் துணை போனதாக கூறப்படுகிறது. இதுசம்பந்தமாக ஊர் பொதுமக்கள் சார்பாக சுமார் பத்து மாதங்களுக்கு மேலாக தமிழக முதல்வர்,

மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சித் தலைவர் போன்ற உயர் அதிகாரிகளுக்கு புகார் மனு செய்தும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில்,

இதனை கண்டித்து தோனமேடு பகுதியில், தோனமேடு 1வது வார்டு பொதுமக்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிகின்றோம் என பேனர் வைத்து, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story