திருமணம் செய்வதாக கூறி ஐடி ஊழியரிடம் 67 லட்ச ரூபாய் மோசடி!

திருமணம் செய்வதாக கூறி ஐடி ஊழியரிடம் 67 லட்ச ரூபாய் மோசடி!

திருமணம் செய்வதாக கூறி ஐடி ஊழியரிடம் 67 லட்ச ரூபாய் மோசடி!

திருமணம் செய்வதாக கூறி ஐடி ஊழியரிடம் 67 லட்ச ரூபாய் மோசடி!
கோவை: திருப்பூர் மாவட்டம் கருவலூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன்(33). தற்போது விளாங்குறிச்சி பகுதியில் தங்கியிருந்து ஐடி பணி செய்து வந்த இவர் திருமண தகவல் வலைதளத்தில் திருமணத்திற்கு வரன் வேண்டி பதிவு செய்துள்ளார்.இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்ட வித்யபிரபா என்ற பெண் சபரிநாதனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளார்.இதனையடுத்து திருமணத்தை விரைவில் வைத்து கொள்ளலாம் என வித்யபிரபா உத்தரவாதம் அளித்த நிலையில் சபரிநாதனிடம் 67 லட்ச ரூபாயை தன் பெயரிலும் தன் உறவினர்கள் பெயரிலும் வங்கிக் கணக்கின் மூலம் பெற்றுள்ளார்.இந்த நிலையில் வேறொரு நபருடன் வித்யபிரபாவிற்கு திருமணம் நடைபெற்று உள்ளது.இதனை அறிந்த சபரிநாதன் தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு வித்யபிராபிவிடம் கேட்டுள்ளார்.பணம் மற்றும் பொருட்களை திருப்பித் தர மறுத்ததால் வித்யபிரபா மற்றும் அவரது உறவினர்கள் கருப்புசாமி,லோகநாயகி, கணேஷ்,சந்தோஷ், பஞ்சவனம்,சுபாஷ், சந்தியா உள்ளிட்டவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story