அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி

மோசடி

நீதிமன்றத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் மோசடி செய்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அருகே உள்ள ராஜிவ்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காமாட்சி இவரது ப அண்ணன் கணேசன் உடல்நலக் குறைவு காரணமாக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது காமாட்சி தனது அண்ணனை பார்ப்ப - தற்காக அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தார்.

அப்போது அங்கு மருத்துவமனை ஊழியரான கடத்தூர் அருகே உள்ள மடதஅள்ளியை சேர்ந்த அதியமான் என்பவர் காமாட் சியிடம் பேச்சு கொடுத்து அவரிடம் குடும்ப விவரங்களை தெரிந்து கொண்டார். பின்னர் காமாட்சியின் அண்ணன் மகன் சரவணனுக்கு ஓசூரில் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக அவர் ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இதை நம்பிய காமாட்ச அதியமானிடம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கொடுத் துள்ளார். பணத்தை வாங்கி கொண்ட அவர் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்துள்ளார். இந்த மோசடி குறித்து காமாட்சி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து அதியமானை கைது செய்தனர்.

Tags

Next Story