வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி
விழுப்புரம் மாவட்டம் அரசூர் பாரதி நகரை சேர்ந்த விஜய் தனது உறவினர்களுடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திற்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனக்கு விழுப்புரம் அருகே கப்பூர் கிராமத்தை சேர்ந்த ஒருவர் நன்கு அறிமுகம் ஆனவர். அவர் கடந்த 4.5.2017 அன்று என்னிடம் வந்து காவல்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பிய நான், அவரிடம் ரூ.2 லட்சம் வழங்கினேன். ஆனால் இதுநாள் வரையிலும் எனக்கு அவர் வேலை ஏதும் வாங்கித்தர வில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
நான் அந்த பணத்தை கடன் வாங்கி அவ ரிடம் கொடுத்தேன். தற்போது வட்டியையும் கட்ட முடியாமல் அச லையும் திருப்பிக்கொடுக்க முடியாமல் மிகவும் மனவேதனையில் உள்ளேன். எனவே என்னிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என் னுடைய பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.