அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி

விருதுநகர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக 8 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தனியார் தொண்டு நிறுவன அதிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் மனு

விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் உமையலிங்கம். இவர் விருதுநகர் மற்றும் ஆர்.ஆர்.நகர் பகுதிகளில் அமிர்தா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 2020 ஆண்டுகளில் நடத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் தன்னுடைய பவுண்டேஷன் சார்பில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உமைய லிங்கம் விருதுநகர் அருகே உள்ள பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரிடம் 1வட்சத்து 35 ஆயிரம் மற்றும் ராஜபாண்டி என்பவரிடம் 1 லட்சம் மற்றும் சாந்தி என்பவரிடம் 3 லட்சம் மற்றும் தனலட்சுமி என்பவரிடம் 2 லட்சம் ஆகியோர்களிடம் கடந்த 2020 ஆண்டு அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டு களாக அரசு வேலைக்காக பணம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் உமையலிங்கம் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் உமைய லிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது உரிய பதில் அளிக்காமல் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்சத்தை மோசடி செய்த உமையலிங்கம் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப் பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story