அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - அரசு ஊழியர் மீது வழக்கு பதிவு.

பைல் படம் 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அரசு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பண மோசடி செய்த அரசு ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை நேதாஜி நகரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 56). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் (வயது 60) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, மணிவண்ணன் தான் தமிழ்நாடு தொழில் நுட்ப இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருவதாகவும், தனக்கு உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை தெரியும் என்றும், படித்துவிட்டு வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும் கூறப்படுகிறது.

சண்முகம் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கூறியதையடுத்து, வேலைக்காக திருவெள்ளறை, மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த 12 பேர் சண்முகத்திடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன்படி தான் பெற்ற பணம் சுமார் ரூ. 15லட்சம் வரை மணிவண்ணனிடம் சண்முகம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேலை வாங்கி கொடுக்காமலும்,பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் சண்முகம் திருச்சி நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் போலீசார் மணிவண்ணன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மணி வண்ணன் இன்று (செவ்வாய்க் கிழமை) ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது.

Tags

Next Story