பேராசிரியரிடம் நூதன முறையில் பண மோசடி

பேராசிரியரிடம் நூதன முறையில் பண மோசடி

பேராசிரியரிடம் நூதன முறையில் பண மோசடி

விழுப்புரத்தில் கல்லூரி பேராசிரியரிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் வழுதரெட்டி, பாண்டியன் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் இளங்கோவன் (44). கல்லூரி பேராசிரியரான இவரது கைப்பேசிக்கு அண்மையில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் தான் வங்கியிலிருந்து பேசுவதாகவும், தங்களது வங்கிக் கடன் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்தாராம்.இதை நம்பிய இளங்கோவன் அந்த நபா் கூறியபடி வங்கி விவரங்களை கொடுத்தாராம். இதையடுத்து, இளங்கோவனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.45 லட்சம் எடுக்கப்பட்டது.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத்தடுப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story