வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.12 லட்சம் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12.12 லட்சம் மோசடி

காடையாம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக கூறி மர்மநபர்கள் ரூ.12.12 லட்சம் மோசடி செய்தனர். 

காடையாம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக கூறி மர்மநபர்கள் ரூ.12.12 லட்சம் மோசடி செய்தனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலையை தேடி வந்தார். அப்போது, அவரை டெலிகிராமில் தொடர்பு கொண்ட ஒருவர், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற ஆன்லைன் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதற்கு நீங்கள் சம்மதமா? என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதன் மூலம் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்படி அறிவுறுத்தினார். பின்னர் அந்த பணியை முடித்தவுடன் குறிப்பிட்ட தொகையை அவர் சம்பாதித்தார்.

இதையடுத்து அவர் பல வங்கி கணக்குகளில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.13 லட்சத்து 30 ஆயிரத்து 603 வரை முதலீடு செய்துள்ளார். அதற்கு கமிஷன் தொகையாக அவருக்கு ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 840 கிடைத்தது. அதன்பிறகு அவருக்கு கமிஷன் தொகை எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர், இந்த மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதில், மோசடி செய்த ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்து 763-ஐ மீட்டுத்தருமாறு தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்ணபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story