ஏலச்சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி - பெண் கைது

ஏலச்சீட்டு நடத்தி  ரூ.83 லட்சம் மோசடி - பெண் கைது

சங்கீதா

கோவை சுந்தரபுரம் அருகே மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி ரூ.83 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார். கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலகுமரனின் மனைவி சங்கீதா.வீட்டில் இருந்து இட்லி மாவு அரைத்து விற்பனை செய்து வந்தார்.மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார். சீட்டில் சேர்ந்தவர்கள் சீட்டு முதிர்வடைந்த நிலையில் அசல் மற்றும் வட்டி தொகையை திரும்ப கொடுக்காமல் சங்கீதா ஏமாற்றி வந்ததாக தெரிகிறது

.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். சுந்தராபுரம் போலீசார் இந்த மோசடி தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.விசாரணையில் 100 க்கும் மேற்பட்டோரிடம் 83 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சங்கீதாவை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story