ஆத்தூரில் கடைகளில் ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக மோசடி

ஆத்தூரில் கடைகளில் ஜி பே மூலம் பணம் அனுப்பியதாக மோசடி

வெளியான சிசிடிவி

ஆத்தூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் உள்ள கடைகளை குறி வைத்து ஜி பே (g pay) பணம் அனுப்பியதாக பொய்யாக கூறி ஏமாற்றி செல்லும் நபரின் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தென்றல் சூப்பர் மார்க்கெட்டில் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் சீட்டு கொடுத்து தற்போது எனக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாயாக வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு கடைக்காரர்கள் எங்களிடம் ,

நீங்கள் கேட்கும் தொகை இல்லை 3 ஆயிரத்திற்கு மட்டுமே இருப்பதாகவும் தெரித்துள்ளார் அப்போது நான் உங்கள் ஜிபேவில் பணம் அனுப்பிவிட்டேன் என்று கூறு கடையில் இருந்த பெண்களிடம் நைசாக பேசி நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் இது குறித்து கடையின் உரிமையாளர் கார்த்திகேயன் ஆத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு கடையில் இருந்த சிசிடிவி வீடியோவை ஆய்வு செய்து நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்டு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தற்போது இந்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரல்.

Tags

Next Story