வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சிவகங்கையில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் நடந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். 

சிவகங்கையில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் நடந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சதீஷ்குமார். இவர் பகுதி நேர வேலைக்காக வாட்ஸப்பில் தேடிய போது அதில் பேசிய அடையாளம் நபர் டெலிகிராம் ஐடியை தொடர்பு கொள்ளுமாறும் அதில் சம்பளம் தருவதாக கூறி முதல் தவணையாக சதீஷ்குமாருக்கு சொற்பத்தொகையை அனுப்பி உள்ளார். அதன் பின் அட்வான்ஸ் தொகை கொடுத்தால் அதிக சம்பளம் தருவதாக கூறி அவரது வங்கி கணக்கை தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சதீஷ்குமார் 5 தவணைகளில் அவர்களின் வங்கி கணக்கிற்கு ரூபாய் 13 லட்சத்து 25 ஆயிரத்து 715 அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் சதீஷ்குமாரை ஏமாற்றியதாக சிவகங்கை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story