இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சாரம்

இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சாரம்
சங்ககிரி: கிராமப்பகுதிகளில் இலவச சட்ட விழிப்புணர்வு வேன் பிரச்சாரம் இயங்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குபட்ட கிராமங்களில் இலவச சட்ட விழிப்புணர்வு குறித்த வேன்பிரச்சாரம் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றம், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கிராமங்கள் தோறும் பொதுமக்கள் இலவச சட்ட விழிப்புணர்வுகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் சேலத்திலிருந்து சங்ககிரிக்கு வருகை தந்த வேன் பிரச்சாரத்தை சங்ககிரி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் எண்.1 எஸ்.ஆர்.பாபு, எண்.2 என்.இனியா ஆகியோர் வரவேற்று பொதுமக்களிடத்தில் வட்ட சடட்ப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கூறினர். இது குறித்து பொதுமக்களிடத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள், சிறைக்காவலில் இருப்பவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் உள்ளவர்கள் உள்ளிட்ட பலர் வட்ட சட்ட பணிகள்குழுவில் மனு அளித்து அதற்குரிய பலனை அடையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு பொதுமக்கள் 18004252441 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ககிரி,, நாகிசெட்டிப்பட்டி, சன்னியாசிப்பட்டி, கல்லுக்கட்டியூர், அம்மன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு வேன்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story