மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ – மாணவியருக்கு தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது.
நடப்பு 2023 – 2024ம் கல்வியாண்டில், ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 அரசு பள்ளிகளில், பிளஸ் 1 பயிலும், 531 மாணவ – மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. இதன் துவக்க விழா, நேற்று வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் உமா முன்னிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்று, முதற்கட்டமாக 531 பேருக்கு சைக்கிள் வழங்கினார்.
இதில், ஒன்றிய குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துரைசாமி, வெண்ணந்தூர் டவுன் பஞ்., தலைவர் ராஜேஷ், முதுகலை ஆசிரியர் ஜெயபாலன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேதுராமலிங்கம், வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், அத்தனூர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் குணசேகரன், வெண்ணந்தூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பேபி லதா மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தகவல் தொழில்நுட்ப பிரிவு ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.