அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் - அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினார்

அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள் - அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினார் 

ராணிப்பேட்டை அரசு பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினார்
தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தி வருவதாக மாநில கைத்தறி மற்றும் துணிவு துறை அமைச்சர் ஆர் காந்தி தெரிவித்தார் ராணிப்பேட்டை மாவட்டம், புளியங்கண்ணு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில கைத்தறி மற்றும் துணிகள் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு 75 பள்ளிகளை சேர்ந்த 10,5,57 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியினை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, தமிழக அரசு பள்ளி கல்வி துறைக்கு எண்ணற்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் கல்வி முன்னேற்றமடைய செய்து வருவதாகவும், குறிப்பாக விலையில்லா சைக்கில் திட்டம், புதுமைப் பெண் திட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் திட்டம் என பல திட்டங்களை மாணவர்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு செய்து வருவதாக தெரிவித்தார். ஆகவே மாணவ பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து நன்கு படிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story