அதகபாடி பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா

தர்மபுரி மாவட்டம் அதகபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

தர்மபுரி கிழக்கு மாவட்டம் தர்மபுரி மேற்கு ஒன்றியம், அதகபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தர்மபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி EX.MLA அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுமாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் பசுவராஜ், மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,சுற்றுச்சூழல் மாவட்ட துணை அமைப்பாளர் இளங்கவி,மருத்துவர் அணி மாவட்ட துணை தலைவர் இளஞ்செழியன் பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சூர்யா,திமுக நிர்வாகி மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உட்பட , மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story