விலையில்லா மிதிவண்டி: மாணவ,மாணவிகளுக்கு வழங்கிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா தலைமை வகித்தார். வட்டாச்சியர் சாந்தா முருகேசன், பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா, கவுன்சிலர் புவனேஸ்வரி காளிதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலை நாட்டியம்,சிலம்பம் போன்ற கலைகளை செய்து அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர்.
பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.மேலும் பொன்னமராவதி ஒன்றியம், காரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலத்தானியம், சடையம்பட்டி, நகரப்பட்டி, பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி,வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி, மேலைச்சிவபுரி அரசு மேல்நிலைப்பள்ளி என 2,225 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசு பள்ளி மாணவ,மாணவிகளுக்கு எண்ணற்ற பல திட்டங்களை வழங்கி வருவதாகவும்
தமிழக அரசின் மூலம் வழங்கப்பட்டுள்ள இந்த மிதிவண்டிகளை மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும். மாணவ, மாணவிகள் மிதிவண்டியினை நாள்தோறும் பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைகிறது எனவும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சூளுரைத்தார்.இந்நிகழ்வில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,திமுக பொன்னமராவதி தெற்கு ஒன்றியச் செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன்,சடையப்பட்டி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்து, பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலவயல் முரளி சுப்பையா, பேரூராட்சி கவுன்சிலர்கள் இஷா விகாஸ், நாகராஜ், நகர அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன்,செவலூர் ஊராட்சி மன்றத்தலைவர் திவ்யா முத்துக்குமார், நெசவாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சுந்தரி ராமையா, மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர்,ஆலவயல் சாமிநாதன், பேரூராட்சி கவுன்சிலர்கள், கிராம நிர்வாக அலுவலர்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.