மக்களின் சேவகன் அறக்கட்டளை சார்பில் இலவச ரத்ததான முகாம்

மக்களின் சேவகன் அறக்கட்டளை சார்பில் இலவச ரத்ததான முகாம்

மக்களின் சேவகன் அறக்கட்டளை சார்பில் இலவச ரத்ததான முகாம்

மக்களின் சேவகன் அறக்கட்டளை சார்பில் இலவச ரத்ததான முகாம் நடைப்பெற்றது.
மக்களின் சேவகன் அறக்கட்டளை சார்பில் கடந்த ஒரு ஆண்டாக ஜூன் 14 என்ற பெயரில் ரத்ததான முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதையொட்டி பல்வேறு தரப்பினர் ரத்ததானம் செய்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மக்களின் சேவகன் அறக்கட்டளை, லோட்டஸ் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் இணைந்து ரத்ததான முகாமை சேலத்தில் நடத்தின. சிறப்பு அழைப்பாளர்களாக லோட்டஸ் கண் மருத்துவமனையின் பொது மேலாளர் கார்த்திக்ராஜா, தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனர் வக்கீல் பிரின்ஸ், வக்கீல் சண்முகம், மக்களின் சேவகன் அறக்கட்டளை நிறுவன தலைவர் அழகாபுரம் ஜெ.மோகன், வினோத், பூமலை ராஜன், மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் 261-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை மக்களின் சேவகன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர். இந்த முகாம் குறித்து மக்களின் சேவகன் அறக்கட்டளை நிறுவன தலைவர் அழகாபுரம் ஜெ.மோகன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ரத்ததானம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள், மாணவ, மாணவிகள் முன்வந்து ரத்ததானம் செய்து வருகின்றனர் என்றார்.

Tags

Next Story