தஞ்சாவூரில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - ஆட்சியர் தகவல்

தஞ்சாவூரில் போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு - ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2023-ஆம் ஆண்டு திட்டநிரலில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 2222 காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு 07.01.2024 அன்று நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் B.Ed படித்திருக்க வேண்டும். மேலும், TET இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு இம்மாதத்தில் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு அனுபவமிக்க சிறந்த வல்லுநர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழ்,ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்பு எடுக்கும் பயிற்றுநர்களுக்கு மதிப்பூதியம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800/- ஆகும். இப்பயிற்சி வகுப்பிற்கு Power Point Presentation (PPT) மற்றும் மாதிரி வினாத்தாட்கள் தயார் செய்து தர வேண்டும். எனவே, விருப்பமுள்ள பயிற்றுநர்கள் கீழ்க்காணும் நிபந்தனைகளின்படி https://forms.gle/8gtEn9XDPfscbUgC7 என்ற படிவத்தை (Google Form) பூர்த்தி செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.1.போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திய முன் அனுபவம் பெற்றவர்கள். 2.தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு பயிற்றுநர் தகுதி பெற்றிருக்கவேண்டும். 3.விண்ணப்பித்த பயிற்றுநர்கள் நேர்காணலுக்கு அழைக்கும் போது தயார் செய்த பாடக்குறிப்பு, மாதிரி வினா மற்றும் தொடர்புடைய பாடத்தின் PPT ஆகியவற்றை உடன் எடுத்துவர வேண்டும். 4.மேலும், 10-15 நிமிடங்கள் வரை தொடர்புடைய பாடத்தில் ஏதேனும் ஒருதலைப்பிலும் மாதிரி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு, விருப்பமும் தகுதியும் உள்ள பயிற்றுநர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சுய விவர குறிப்பு (Resume) மற்றும் கல்வி சான்று நகல்களுடன் 15.11.2023, 16.11.2023 மற்றும் 17.11.2023 ஆகிய மூன்று நாட்களில் அலுவலக நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறும், மேலும் தொடர்புக்கு அலுவலக தொலைப்பேசி எண்கள் 04362-237037 / 9499055905 தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story